அதிகாலைக் கனவு…

கற்பனை அல்ல இது அதிகாலை தூக்கம் கலைத்துச் சென்றதொரு கனவு..
அகவை எய்திய அரும்பு
அழகாய் பனித்துளி படர்ந்த கரும்புwar2
கீரை பறிக்கும் தலைவி
அடைந்த கோழி முடுக்கும் கிழவி
அனைத்தும் ரசித்தே சிறுவன்..
கூடவே செல்லும் நாய்.. கருமன் !!
என்னே ஒரு காட்சி …
இதே அழகோடு இன்னும் நீடித்திருந்தால் நன்றாகத் தானிருக்கும் …
காட்சியின் நீட்சியாய் கண்டேன் அக்கனவை

காத தூரத்திலே கரும் பச்சை உடுப்பினிலே சாரையாய் தெரிந்தது…
தெரிவது தெளிவாகும் முன் சிறுவன் சிதறியடித்து பின்னோட …
களி உருண்டை அளவினிலே பந்து மழை பெய்தது
விழுந்த பந்து ஒவ்வொன்றும் உருண்டது நிலத்தில் புகைஉடனே..
அடுத்த காட்சி தோன்றும் முன்னே அழிந்தது அழகுத்தோட்டமொன்று..
அடிவயிறு கலங்க கண்விழித்தேன் சிறுவனின் கடைசி கதறல் காதுக்குள் – அம்மா ?!! …..
அம்மா .. அம்மா ..ஐயோ அது என் தாய் மொழி அன்றோ ?
அழிந்தவன் என் சக உதிரன் … அந்த பந்து புதைந்த மண் என் முன்னோர் விதைந்த மண் ..
அய்யகோ !! இனியும் தூக்கமா ? இல்லை தூக்கம் வரத்தான் செய்யுமா ?
கற்பனை அல்ல இது.. கையால் ஆகா ஒரு சகோதிரனின் ஒப்பாரி

 

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

~ by செம்மொழி மேல் செப்ரெம்பர் 15, 2009.

8 பதில்கள் to “அதிகாலைக் கனவு…”

  1. வணக்கம் சகோதரா செம்மொழி.முதல் வணக்கமே கலக்கத்தோடு.என்ன செய்யலாம் எங்கள் விதி அது என்றாயிற்று.மாற்றுவாரும் மறைந்துவிட தேற்றுவாரில்லாமல் ஏதோ ஒரு தேசங்களில் நாம் !

    உங்கள் பெயரை நான் சரியாக உச்சரிக்கிறேனா?உங்கள் அழகு பெயரைத் தமிழில் இடுங்கள்.இன்னும் அழகு கூடும்.உங்கள் கவிதையில் எங்கள் அனுபவ வலி.கீழேயும் 2 கவிதைகள் பார்த்தேன்.தமிழின் சிறப்போடு அற்புதமாய் இருக்கிறது.”இதுதான் காதலா”கவிதையின் ஓவியம் நீங்கள் வரைந்ததா?அழகாயிருக்கு.சந்திப்போம் தோழா.

    • வணக்கம்..”முதல் வணக்கமே கலக்கத்தோடு.என்ன செய்யலாம் எங்கள் விதி அது என்றாயிற்று.மாற்றுவாரும் மறைந்துவிட தேற்றுவாரில்லாமல் ஏதோ ஒரு தேசங்களில் நாம்” – இதற்குப் பதில் என்ன கூறுவேன் நான் ..

      தரணி ஆண்ட இனமிது
      சிறு அரணுக்குள் அடைக்கப்பட்டோம் ..

      தருமம் மறுபடி வெல்லும் சகோதரி …நம்பிக்கை இழக்க வேண்டம் …

      மிகச்சரியாக உச்சரித்தீர்கள் ..’செம்மொழி’- யேதான் அது ( புனைப்பெயர்தான் இது) ..அந்த ஓவியம் தீட்டத்தான் ஆசை..விரைவில் என்னுடைய சொந்த ஓவியங்களைப் பதிப்பேன் ..உங்களது படைப்புகளைப் படித்தேன் நானும்..மிக அருமை ..தமிழன்தான் சிறக்கவில்லை .. தமிழாவதும் சிறக்கட்டும் .. நன்றி ..தொடர்க ..

  2. அன்பு சகோதரா
    கவிதை வரிகளும், சொல்லாடல்களும் மனதை தைத்துச் செல்கின்றன.

    வா, பகையே வா
    வந்தெம் நெஞ்சேறி மிதி,
    பூவாகி,காயாகி, மரம் உலுப்பிக் கொட்டு,
    ஒன்றை நினைவில் கொள்,
    ஆயினும் அடிபணியோம்-

    வலிக்கும் போதெல்லாம், இந்த வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன்.
    நம்பிக்கை இழக்காதீர்கள்.

    விரைவில் வசந்தத்தை அடைவோம்.

    என்றென்றும்
    அன்புடன்
    ஆரூரன்

  3. azhagana varigal, aalamana valigal. sugamillatha vazhkkai, vaala vazhi theriyatha nam makkal. en manamum azhukirathu mounamagave.

    • என் செய்வது தோழியே …பாராண்ட தமிழன் ஊராண்டான் அடிமையாகும் காலமாகிற்றே … உங்கள் மனம் மட்டுமல்ல ….நிறைய பேரின் அழுகை தண்ணீரில் கண்ணீரானது … வருகைக்கு நன்றி .. தொடர்ந்து சந்திப்போம்.. 🙂

  4. நன்றி, உங்களுடைய மற்ற இடுகைளையும் இனிதான் படிக்க வேண்டும். ஆவலாய் உள்ளது!

பின்னூட்டமொன்றை இடுக