நல்லதொரு வீணை நான்….

•செப்ரெம்பர் 20, 2009 • 5 பின்னூட்டங்கள்

நல்லதொரு வீணை நான் ….
நாதியின்றி புழுதியில் எரிக்கப்பட்டSketch_CryingBoy
நல்லதொரு வீணை நான் !

வாரணமாயிரம் சூழ வர
பாமரராயிரம் பலி விட்ட
தேமதுரத் தமிழினம் நான்

வந்தாரை வாழ வைத்தே
பெற்றாரைச் சாக வைத்த
பேரினப் பெருமை நான்

கல் தோன்ற மண் தோன்ற
உயிர்களவாடி தான் தோன்ற
சகித்த சாவு நான்

அக்னிக் குஞ்சு நான் ….
பகைவனின் எச்சத்தில் கரியான
அக்னிக் குஞ்சு நான் !!

அன்பே சிவம் நான்
ஆழியில் அழுகின்ற
அன்புச் சவம் நான் …

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

Advertisements

காதலின் கடிதம்…

•செப்ரெம்பர் 18, 2009 • 6 பின்னூட்டங்கள்

கவிதை அல்ல இது .. கடிதம் ..
வாசித்துவிட்டுச்  செல்லுங்கள் …

‘வசீகரா” பாடல் அவனை வசப்படுத்திய நேரம் …
தனிமை பிடித்தது ..kate-winslet-sketch-blog
காலம் கனத்தது ..
விடியலின் தூரம் வெகுவானது ..

அவன் எழுதுகோல் நிறையவே அழுதது ..
“என்னடா பண்ற ..உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் ..” – அவன் நண்பன் ..
அவனுக்கோ காது மட்டுமல்ல .. மூளையும் செவிடானது ..

பேருந்தில் பயணச்சீட்டு வாங்க
பயணத்தின் தொலைவில்
பாதி கடந்துதான் நினைவு வந்தது ..

எண்ணத்தில் நானல்ல
எண்ணமே “நானானது” …!!!

அவன்
கவிதையின் கருப்பொருள் மாறியது ..
நிமிடத்தின் நொடிக்கணக்கு மாறியது ..

மடலில் மட்டும் மனதைப்பகிர்வதா ?
மணத்திலும் பகிர்வதா ?

எண்ணத்தை ஏற்றுக்கொண்டவள்
என்னையும் ஏற்றுக்கொள்ளவாளா ??

அவன் மனதில் குழப்பமா ?
இல்லை
குழப்பத்தில் மனமா ??

காதலின் உந்துதலையும்,
கவிதையின் உந்துதலையும்
தள்ளிப்போடாதே … அவனுள்ளே ஒரு அசரீரி ..

“இந்த நாள் இனிய நாள்”
என்ற எண்ணத்திலே
கடந்தது வாரம் ஆறேழு ..

காதலுக்கும்  கவிதைக்கும்
வேகம் அதிகம் ….
எளிதில் தாக்கும் கவிஞனை….

நேரம் வந்தது …
நாடி நின்றது ..
நினவு ஒடுங்கியது ..
கண்ணில் ஒரு பிரளயம் ..

“என்னப்பா ..ஏதோ சொல்ல வந்த ..
சொல்லு ..என்கிட்ட என்ன .. ”
ஆம் கேட்டது அவளேதான் ..

“இல்லடா …ஏதோ மனசு சரி இல்ல..
நாளைக்குப் பேசுவோம் .. ”
தள்ளிப்போட்டான் ..தைரியம் இன்றி ..

notepad and penபிள்ளைப்பேறு மட்டுமல்ல ..
காதலும் கடினம்தான் ..
பெற்றெடுக்க … உயிரின் வலி ஆகிற்றே ..

அழுகை வந்தது …
அமைதியாய் திரும்பினான் ..வீடு…
“என்னம்மா ஏதோ பக்கத்துக்கு வீட்ல கூட்டம்..
ஒரே சத்தமும் கூட.. “

“ஆமாடா ..அந்தப் பொண்ணு யாழினி
யாரையோ கூட்டிட்டு ஓடிட்டாளாம் ..
அவ அம்மாவிற்கு நெஞ்சு வலி ..”

நிமிர்ந்து பார்த்தான் அன்னை முகம் ..
உயரின் வலி மறந்தது ..
அன்னையின் நெஞ்சு வலி நிறைந்தது மனதில் ..

பக்குவமாய் பறித்து …சில
கிழமைகளில் கிழித்து
தூர எறிந்தான் .. என்னை …

இப்படிக்கு,
காதல் ..
இன்னொரு மனதைத் தேடி …..

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

அம்மா …

•செப்ரெம்பர் 16, 2009 • 13 பின்னூட்டங்கள்

மேல் சட்டை போடாம
உன்காலடி சுத்தி வந்த
கணமெல்லாம் மறக்கலையே !

நாலாம் வகுப்புலchild alone
நாள்முடிச்சு வரும்போது
ஒத்தரூபா பணம்தந்து
வாழைப்பழம் வாங்கித்தந்த …

ஆறாம் வகுப்புல
அம்மையில படுத்தபோது
உப்பில்லாப் பண்டத்தை
அழுதுட்டே ஊட்டிவிட்ட …

பத்துப்பேர் பரிமாறும்
சிறந்தவகை உணவுகூட
நீ பேசிகிட்டே சுட்டுபோடும்
தோசை போல இல்லையம்மா …

விமானப் பயணமும்
பஞ்சுமெத்தை உறக்கமும்
பரதேசி எனக்கு
நீ போட்ட பிச்சையம்மா…

உன்னருகாமை இல்லாம 
விம்பி விம்பி அழுதுகிட்டே
இழந்துவிட்ட உன்மடி சுகத்தை
ஏக்கமாய் நோக்குதம்மா ..

ஒவ்வொரு நொடியையும்
ஓடி ஓடி துரத்தி விட்டேன்
போகின்ற நொடியெல்லாம்
நான் வாழறதா நினைக்கலையே ..

எந்த நொடி நான் மறக்க
ஏறி வந்த ஏணியெல்லம்
உன் எழும்பால ஆனதுவே ..

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

அதிகாலைக் கனவு…

•செப்ரெம்பர் 15, 2009 • 8 பின்னூட்டங்கள்

கற்பனை அல்ல இது அதிகாலை தூக்கம் கலைத்துச் சென்றதொரு கனவு..
அகவை எய்திய அரும்பு
அழகாய் பனித்துளி படர்ந்த கரும்புwar2
கீரை பறிக்கும் தலைவி
அடைந்த கோழி முடுக்கும் கிழவி
அனைத்தும் ரசித்தே சிறுவன்..
கூடவே செல்லும் நாய்.. கருமன் !!
என்னே ஒரு காட்சி …
இதே அழகோடு இன்னும் நீடித்திருந்தால் நன்றாகத் தானிருக்கும் …
காட்சியின் நீட்சியாய் கண்டேன் அக்கனவை

காத தூரத்திலே கரும் பச்சை உடுப்பினிலே சாரையாய் தெரிந்தது…
தெரிவது தெளிவாகும் முன் சிறுவன் சிதறியடித்து பின்னோட …
களி உருண்டை அளவினிலே பந்து மழை பெய்தது
விழுந்த பந்து ஒவ்வொன்றும் உருண்டது நிலத்தில் புகைஉடனே..
அடுத்த காட்சி தோன்றும் முன்னே அழிந்தது அழகுத்தோட்டமொன்று..
அடிவயிறு கலங்க கண்விழித்தேன் சிறுவனின் கடைசி கதறல் காதுக்குள் – அம்மா ?!! …..
அம்மா .. அம்மா ..ஐயோ அது என் தாய் மொழி அன்றோ ?
அழிந்தவன் என் சக உதிரன் … அந்த பந்து புதைந்த மண் என் முன்னோர் விதைந்த மண் ..
அய்யகோ !! இனியும் தூக்கமா ? இல்லை தூக்கம் வரத்தான் செய்யுமா ?
கற்பனை அல்ல இது.. கையால் ஆகா ஒரு சகோதிரனின் ஒப்பாரி

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

பிரசவ அறை!!

•செப்ரெம்பர் 15, 2009 • 16 பின்னூட்டங்கள்

                                                                          நித்தமும் நினைச்சிருக்கேன்ist2_4725638-pregnant-woman
  நினைவெல்லாம் அணச்சிருக்கேன்

இரத்தத்த பிரிச்செடுத்து
  பாலாக்கி வச்சிருக்கேன்

மொத்தமா உனக்காக
  மனக்கோட்டை கட்டிபுட்டேன்

இருண்டிருக்கும் தண்ணிக்குள்ள
  உருண்டு உருண்டு படுக்குறயே

கட்டித் தங்க காலாலே
  எட்டி எட்டி உதைக்கிறையே

எப்படித்தான் நீ இருப்ப
  இப்படியா ஏங்க வைப்பே

பிஞ்சு விரல் தொட்டுத்தொட்டு
  கொஞ்ச மனம் துடிக்குதடா

அஞ்சுகமே உன்னைஎண்ணி  
  கொஞ்சம் கண்ணு கலங்குதடா

எண்ணி எண்ணி பார்த்துக்கிட்டே
  பத்து மாசம் சுமந்துபுட்டேன்

உடம்பெல்லாம் வலிக்குதுடா
  மயக்கமா இருக்குதடா

எங்கப்பன் மறுபிறப்பே
   உங்கப்பன் குல விளக்கே

நரக வலி தாங்கிடுவேன்
   உன்ன நோகாம பெத்தேடுப்பேன்

பால் நிலவுக்கு அனுப்பிடுவேன்
    பார் போற்ற வளர்த்தெடுப்பேன்

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

பறக்க மறுத்த பறவைகள் …

•செப்ரெம்பர் 15, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

plane

கடந்த ஒரு வார காலமாகவே என் மனதில் உறுத்தலாகவே இருந்து வந்த ஒரு விடயத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வுக்குமே வெவ்வேறு நியாயங்கள், வெவ்வேறு கோணத்தில் நோக்கப்படலாம். அந்த ஒரு அடிப்படையான விதியை மனதில் கொண்டு, ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானிகளின் செயல்பாடுகள் பற்றி என்னுடைய பார்வையை இங்கே பதிப்பித்துள்ளேன்.

பிரச்சனையின் காரணம் எதுவாகக் கூறப்பட்டாலும், தன்னுடைய சக விமானிகளின் பணி நீக்கமே அடிப்படைக் காரணமாக உள்ளது. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட விமானிகள் ஒட்டு மொத்தமாக ஒரே  நாளில் நலக்குறைவு விடுப்பு எடுத்தனர். நிர்வாகத்தின் பார்வையில் இந்தச் செயல்பாடு பணி நிறுத்தப் போராட்டமாகவே தெரிந்தது.

passenger at plane

நிர்வாகம், தொழிலாளர்கள்  என இரு தரப்பையும் விடுத்து, பொதுமக்களாக நாம் இதைப்பார்ப்போம். பிரச்சனையின் காரணம் எதுவாக இருப்பினும்,பிரச்சனையின் வடிவம் எதுவாக இருப்பினும் பாரத தேசத்தைப் பொறுத்த வரை பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் (!!?) 😦 .

ஜப்பான் அல்லது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வளர்ந்த நாடுகளை எடுத்துக்கொள்வோமேயானால், அவர்களது போராட்டம் என்பது வேலையில் இருந்த வண்ணம் நடத்தும் உள்ளிருப்புப் போராட்டமே! இதனால் பிரச்சனைக்குத் தீர்வும் கிடைக்கிறது, மக்களும் பாதிக்கப்படுவது இல்லை.

நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பண  இழப்பு, தடை பட்டுப்போன விமான பயணங்களால் மிச்சமான எரிபொருள் என அனைத்தையும் விட்டு விட்டுப் பார்க்கும் பொழுது அவதிக்குள்ளான மக்களின் நிலைமை ?

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா ?? …. 

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

இது காதலா ?!

•செப்ரெம்பர் 14, 2009 • 7 பின்னூட்டங்கள்

ஓர விழியின் பார்வைக்கே                                                                               woman_in_saree_1
    மொழியிழந்து தவிக்கின்றேன்

தீர்க்கப் பார்வை தந்திருந்தால்
     தீப்பொறியில் பஞ்சாவேன்

தீந்தமிழை தீண்டி விட்ட
    நா நரம்பை போலன்றோ

உன்னழகை உண்டு விட்ட
    கண்ணிரண்டும் கரைகிறது…

காற்றோடு கரைந்து விடும்
    மேகமென எண்ணிவிட்டேன்

மழையாக மாறி அன்றோ
    மனதுலகை  நனைத்துவிட்டாய்….

குடை இருந்தும் நனைகின்றேன்
    விடை இன்றித் தவிக்கின்றேன்..