காதலின் கடிதம்…

கவிதை அல்ல இது .. கடிதம் ..
வாசித்துவிட்டுச்  செல்லுங்கள் …

‘வசீகரா” பாடல் அவனை வசப்படுத்திய நேரம் …
தனிமை பிடித்தது ..kate-winslet-sketch-blog
காலம் கனத்தது ..
விடியலின் தூரம் வெகுவானது ..

அவன் எழுதுகோல் நிறையவே அழுதது ..
“என்னடா பண்ற ..உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் ..” – அவன் நண்பன் ..
அவனுக்கோ காது மட்டுமல்ல .. மூளையும் செவிடானது ..

பேருந்தில் பயணச்சீட்டு வாங்க
பயணத்தின் தொலைவில்
பாதி கடந்துதான் நினைவு வந்தது ..

எண்ணத்தில் நானல்ல
எண்ணமே “நானானது” …!!!

அவன்
கவிதையின் கருப்பொருள் மாறியது ..
நிமிடத்தின் நொடிக்கணக்கு மாறியது ..

மடலில் மட்டும் மனதைப்பகிர்வதா ?
மணத்திலும் பகிர்வதா ?

எண்ணத்தை ஏற்றுக்கொண்டவள்
என்னையும் ஏற்றுக்கொள்ளவாளா ??

அவன் மனதில் குழப்பமா ?
இல்லை
குழப்பத்தில் மனமா ??

காதலின் உந்துதலையும்,
கவிதையின் உந்துதலையும்
தள்ளிப்போடாதே … அவனுள்ளே ஒரு அசரீரி ..

“இந்த நாள் இனிய நாள்”
என்ற எண்ணத்திலே
கடந்தது வாரம் ஆறேழு ..

காதலுக்கும்  கவிதைக்கும்
வேகம் அதிகம் ….
எளிதில் தாக்கும் கவிஞனை….

நேரம் வந்தது …
நாடி நின்றது ..
நினவு ஒடுங்கியது ..
கண்ணில் ஒரு பிரளயம் ..

“என்னப்பா ..ஏதோ சொல்ல வந்த ..
சொல்லு ..என்கிட்ட என்ன .. ”
ஆம் கேட்டது அவளேதான் ..

“இல்லடா …ஏதோ மனசு சரி இல்ல..
நாளைக்குப் பேசுவோம் .. ”
தள்ளிப்போட்டான் ..தைரியம் இன்றி ..

notepad and penபிள்ளைப்பேறு மட்டுமல்ல ..
காதலும் கடினம்தான் ..
பெற்றெடுக்க … உயிரின் வலி ஆகிற்றே ..

அழுகை வந்தது …
அமைதியாய் திரும்பினான் ..வீடு…
“என்னம்மா ஏதோ பக்கத்துக்கு வீட்ல கூட்டம்..
ஒரே சத்தமும் கூட.. “

“ஆமாடா ..அந்தப் பொண்ணு யாழினி
யாரையோ கூட்டிட்டு ஓடிட்டாளாம் ..
அவ அம்மாவிற்கு நெஞ்சு வலி ..”

நிமிர்ந்து பார்த்தான் அன்னை முகம் ..
உயரின் வலி மறந்தது ..
அன்னையின் நெஞ்சு வலி நிறைந்தது மனதில் ..

பக்குவமாய் பறித்து …சில
கிழமைகளில் கிழித்து
தூர எறிந்தான் .. என்னை …

இப்படிக்கு,
காதல் ..
இன்னொரு மனதைத் தேடி …..

  

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

 

 

 

 

Advertisements

~ by செம்மொழி மேல் செப்ரெம்பர் 18, 2009.

6 பதில்கள் to “காதலின் கடிதம்…”

 1. ‘வசீகரா” பாடல் அவனை வசப்படுத்திய நேரம் …
  தனிமை பிடித்தது ..

  அவன் எழுதுகோல் நிறையவே அழுதது .. intha varigal nalla irukku. matra varigalum azhga irukku.

  blog la niraya kavithai kal padikkum pothu ennoda kavithi yaum innum merugetra vendumnu aasai varuthu. Nanri

  • கவி அவர்களே ,

   “வார்த்தைகள் கடந்த
   உணர்வில்
   வரையறை செய்ய
   தெரியவில்லை எனக்கு
   உந்தன் இருப்பை….”

   இவை உங்களுடைய வார்த்தைகள் ..உங்களது வரிகள்.. கடவுளின் இருப்பை இதை விட அழகாக எப்படி கூறுவது ..ஏற்கனவே மெருகேற்றப்பட்ட வரிகள்தாம் உங்களுடைய வரிகள்.. 🙂 ..அழகிற்கு அழகு சேர்க்க வாழ்த்துகள்.

   நன்றி தோழி .. தொடர்ந்து பயணிப்போம் .. 🙂

 2. செம்மொழி,கவிதை உரைநடையில் ஒரு சிறுகதையே சொல்லிவிட்டீர்கள்.
  வித்தியாசமாய் நல்லாயிருக்கு.காதல் ஒரு பிரசவம்.உரிய நேரத்தில் குழந்தை பிறக்காவிட்டால் காதலுக்கு ஆபத்துத்தான்.

  காதல்…இப்போதுதான் சேரனின் பொக்கிஷம் பார்த்தேன்.அந்தத் தாக்கதோடேயே உங்கள் பதிவு.உண்மையான காதலானால் எத்தனை திருமணம் செய்தாலும் காதல் காதலாகவே வாழும்.இன்னொரு மனதோடு ஒன்றாது காதல்.

  • நன்றி தோழி. மிகவும் நன்றி .. இது வரை இல்லாவிடினும், படியுங்கள் வைரமுத்துவின் – சிகரங்களை நோக்கி… அதில் ஒரு காதல் வரும் ..மிகவும் வித்தியாசமானது ..

 3. வணக்கம் செம்மொழி..
  நன்றாக இருக்கிறது இந்த கவிதை.
  கண்களும் கவி பேசும்’ என்பது போல இங்கு காதலும் கவிப்பேசி இருக்கிறது.
  //பக்குவமாய் பறித்து …சில
  கிழமைகளில் கிழித்து
  தூர எறிந்தான் .. என்னை //
  வலி வழியும் வார்த்தைகள் இவை.. அருமை..
  வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: