அம்மா …

மேல் சட்டை போடாம
உன்காலடி சுத்தி வந்த
கணமெல்லாம் மறக்கலையே !

நாலாம் வகுப்புலchild alone
நாள்முடிச்சு வரும்போது
ஒத்தரூபா பணம்தந்து
வாழைப்பழம் வாங்கித்தந்த …

ஆறாம் வகுப்புல
அம்மையில படுத்தபோது
உப்பில்லாப் பண்டத்தை
அழுதுட்டே ஊட்டிவிட்ட …

பத்துப்பேர் பரிமாறும்
சிறந்தவகை உணவுகூட
நீ பேசிகிட்டே சுட்டுபோடும்
தோசை போல இல்லையம்மா …

விமானப் பயணமும்
பஞ்சுமெத்தை உறக்கமும்
பரதேசி எனக்கு
நீ போட்ட பிச்சையம்மா…

உன்னருகாமை இல்லாம 
விம்பி விம்பி அழுதுகிட்டே
இழந்துவிட்ட உன்மடி சுகத்தை
ஏக்கமாய் நோக்குதம்மா ..

ஒவ்வொரு நொடியையும்
ஓடி ஓடி துரத்தி விட்டேன்
போகின்ற நொடியெல்லாம்
நான் வாழறதா நினைக்கலையே ..

எந்த நொடி நான் மறக்க
ஏறி வந்த ஏணியெல்லம்
உன் எழும்பால ஆனதுவே ..

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

~ by செம்மொழி மேல் செப்ரெம்பர் 16, 2009.

13 பதில்கள் to “அம்மா …”

  1. nalla kavithai.

  2. அம்மாவின் நினைவில் கவிதை உருக்கமாய்.என்ன..குழந்தைநிலா தந்த தக்கமோ…செம்மொழி.
    உங்கள் பெயரத் தமிழில் ஆக்கிவிடுங்கள்.இன்னும் அழகாய் இருக்கும்.

  3. Nalla amma ninaivu,nalla varihalil.

    • மிகவும் நன்றி நண்பரே … உங்கள் முதல் வருகை தொடர் வருகையாகும் என நம்புகிறேன்..வருகைக்கு நன்றி .. மீண்டும் சந்திப்போம் நண்பா .. 🙂

  4. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

  5. நல்ல கவிதை செம்மொழி.. அம்மாவை நினைப்பதே சுகம்.. அந்த வார்த்தைக்கு ஈடாக எதுவும் கிடையாது.. வாழ்த்துக்கள்..

    • சரியான கூற்று தோழி.. அந்த வார்த்தைக்கு நிகரில்லை என்பதால்தான் மொழியைக் கூட தாய்மொழி என்கின்றோம்…வருகைக்கும் ,வாழ்த்துகளுக்கும் நன்றி .. மீண்டும் சந்திப்போம் .. ( ஒரு சிறு திருத்தம் .. வாழ்த்துகளில் ‘க்’ வர கூடாது ..வாழ்த்துகள் மட்டுமே அது )..

  6. நன்றி செம்மொழி.உங்கள் பெயர் இப்போ இன்னும் அழகா இருக்கு.சந்தோஷம்.

    நீங்கள் உங்கள் தளத்தை தமிழ்மணம் தமிழிஸ் போன்ற தளத்தோடு இணைத்துக் கொள்ளுங்கள்.அதோடு நீங்களும் பலரின் பிடித்த தளங்களுக்குப் போயும் சிநேகம் வைத்துக்கொள்ளுங்கள்.நானும் இப்போ இரண்டு வருடங்கள்தான் ஆகிறது.ஆரம்பத்தில் நண்பர்கள் குறைவுதான்.பழைய பதிவுகளில் எனக்குப் பின்னூட்டங்களே இருக்காது.அதனால் இப்போ சிலசமயம் மீள்பதிவுகள் கூட இடுகிறேன்.இப்போ எனக்கு நிறைய நண்பர்கள்.ஆரம்பத்தில் நான் ஈழம் அடுத்து நான் பெண் என்பதாலோ என்னவோ ஒரு கூச்சம் இருந்தது நெருங்கிக்கொள்ள.இப்போ அனைவருமே நண்பர்களாய் சகோதரர்களாய் ஆகிவிட்டோம்.

    • மிக்க நன்றி ஹேமா … “ஆரம்பத்தில் நான் ஈழம் ” … ஒரு காலத்தில் பாருங்கள் “ஆரம்பமே ஈழமாய்” இருக்கும் .. 🙂 ( ஆரம்பம் ஈழமாகத்தான் இருந்தது ..நான் லெமூரியா கண்டமாக இருந்த புவியையும், தமிழையும் பற்றி கூறுகிறேன் ..)

  7. ovvoru varium unmai.

    ஒவ்வொரு நொடியையும்
    ஓடி ஓடி துரத்தி விட்டேன்
    intha lines romba touching a irukku.
    vali ya unara mudethu. nanum sila mathangal intha eekkathai anubavithu irukkiren. ippo ellam enga amma night oorukku poitu vara neram agiduchuna na thuchu porathu illa enakulla naan rombave thudichu poren.

    • ம்ம் … ஆம் தோழி ..அனுபவம்தான் இது ..உண்மையில் ஒவ்வொரு நொடியையும்ஓடி ஓடித் துரத்திக் கொண்டுதான் உள்ளேன் இன்னும் ..

      தோழி – உங்களது கருத்துக்களை தமிழில் பதிந்தால் இன்னும் அழகு கூடுமல்லவா ..?

      🙂

செம்மொழி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி