பிரசவ அறை!!

                                                                          நித்தமும் நினைச்சிருக்கேன்ist2_4725638-pregnant-woman
  நினைவெல்லாம் அணச்சிருக்கேன்

இரத்தத்த பிரிச்செடுத்து
  பாலாக்கி வச்சிருக்கேன்

மொத்தமா உனக்காக
  மனக்கோட்டை கட்டிபுட்டேன்

இருண்டிருக்கும் தண்ணிக்குள்ள
  உருண்டு உருண்டு படுக்குறயே

கட்டித் தங்க காலாலே
  எட்டி எட்டி உதைக்கிறையே

எப்படித்தான் நீ இருப்ப
  இப்படியா ஏங்க வைப்பே

பிஞ்சு விரல் தொட்டுத்தொட்டு
  கொஞ்ச மனம் துடிக்குதடா

அஞ்சுகமே உன்னைஎண்ணி  
  கொஞ்சம் கண்ணு கலங்குதடா

எண்ணி எண்ணி பார்த்துக்கிட்டே
  பத்து மாசம் சுமந்துபுட்டேன்

உடம்பெல்லாம் வலிக்குதுடா
  மயக்கமா இருக்குதடா

எங்கப்பன் மறுபிறப்பே
   உங்கப்பன் குல விளக்கே

நரக வலி தாங்கிடுவேன்
   உன்ன நோகாம பெத்தேடுப்பேன்

பால் நிலவுக்கு அனுப்பிடுவேன்
    பார் போற்ற வளர்த்தெடுப்பேன்

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

Advertisements

~ by செம்மொழி மேல் செப்ரெம்பர் 15, 2009.

16 பதில்கள் to “பிரசவ அறை!!”

  1. அருமையான கவிதை ………

    அணைத்து வரிகளையும் ரசித்தேன் ……….

    அம்மா அன்று அனுபவித்த வலிகளினால் தான்
    நாம் இன்று பிறந்தநாள் கொண்டாடூகிறோம்
    அன்னையை வணங்குவோம் அன்னையை வாழ்த்துவோம்

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சென்மொழி

    • நன்றி அய்யா…”அனைத்து வரிகளையும் ரசித்தேன்” .. என்று கூறி மகிழ்ச்சி அடைய வைத்தீர். உங்கள் கூற்று உண்மை…தாயின்றி யாரும் இல்லை… தொடர்ந்து வரவும்..குறை நிறைகளைச் சுட்டிக்காட்டவும்..

  2. கவிதை மட்டுமில்லே. ஓவியமும் பிரமாதம். தமிழை ‘செம்மொழி’ ஆக்க அமெரிக்காவிலிருந்து கொண்டு பாடுபடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    http://kgjawarlal.wordpress.com

    • நன்றி நண்பரே ..”தமிழை ‘செம்மொழி’ ஆக்க அமெரிக்காவிலிருந்து கொண்டு பாடுபடும்” என்பது சற்றே பெரிய கூற்று ( அதோடு நம் மொழி ஏற்கனவே செம்மொழி தானே ) .. ஆர்வம் அதிகம் உண்டு..தீராக்காதல் உண்டு நம் தாய்மொழி மேல் .. தொடர்ந்து வந்து பாருங்கள் ..மீண்டும் நன்றி.

  3. This is really a good one.Congrats Sathesh.Apprecite your efforts and interest in our language.

  4. வலிகளை வார்த்தைகளாக்கி, அதை மற்றவர்களுக்கும் மாற்றிக் கொடுக்கும், வலி மாற்று வித்தையை அற்புதமாக செய்திருக்கிறீர்கள்

    கோட்டோவியம் அருமை

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

  5. unara mudigirathu oru thayin kathalaum, ekkathaum.

    • நன்றி தோழி ..உங்கள் வருகைக்கு நன்றி .. தொடர்ந்து சந்திப்போம்…..நானும், நண்பர் ஆரூரன் அவர்களும் கூட ஈரோடை சேர்ந்தவர்கள்தான் … 🙂

  6. அருமை அருமை வேறென்ன சொல்ல…..

    பாட்டாக மெட்டுபோட்டு பாடிப்பார்த்தேன். இனிப்பும் புளிப்பும் கசப்பும் கலந்த சுவை போன்றதொரு நிலைப்பாட்டினைப் போல் ஒரு தாய்மையின் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  7. நன்றி நண்பா .. உங்களது அன்பு தமிழ் போல இனிது … உங்களது படிப்பு விவரங்களைப் பார்த்தேன் …மெத்தப்படித்தவர்… வாழ்க ..தொடர்க .. 🙂

  8. அருமை…அருமை…ஒவ்வொறு வரிகளும்! அம்மா என்ற அரியதொறு வார்த்தையினுள் இத்தனை அர்த்தங்களா? வியக்க வைக்கும் பிறவி அம்மா.அர்ச்சனை செய்துள்ளீர்கள் வார்த்தை பூக்களால்! வாழ்க…தொடர்க உங்கள் பணி!! வாழ்த்துக்கள்

    • உங்களது முதல் வரவு நல்வரவாகுக நண்பரே … உங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ..தொடர்ந்து வருக நண்பரே.. தொடர்ந்து பயணிப்போம் ..

  9. Excellent!!! Keep it up. This poem reminds me of the moments I had when I was carrying my baby.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: