இது காதலா ?!

ஓர விழியின் பார்வைக்கே                                                                               woman_in_saree_1
    மொழியிழந்து தவிக்கின்றேன்

தீர்க்கப் பார்வை தந்திருந்தால்
     தீப்பொறியில் பஞ்சாவேன்

தீந்தமிழை தீண்டி விட்ட
    நா நரம்பை போலன்றோ

உன்னழகை உண்டு விட்ட
    கண்ணிரண்டும் கரைகிறது…

காற்றோடு கரைந்து விடும்
    மேகமென எண்ணிவிட்டேன்

மழையாக மாறி அன்றோ
    மனதுலகை  நனைத்துவிட்டாய்….

குடை இருந்தும் நனைகின்றேன்
    விடை இன்றித் தவிக்கின்றேன்..

 ____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

Advertisements

~ by செம்மொழி மேல் செப்ரெம்பர் 14, 2009.

7 பதில்கள் to “இது காதலா ?!”

  1. உன்னழகை உண்டு விட்ட
    கண்ணிரண்டும் கரைகிறது…..

    //குடை இருந்தும் நனைகின்றேன்..//

    அருமையான வரிகள் நண்பரே.

    //குடையிருந்தும் நனைகின்றேன்//

    குளமாக நீ தெரிய
    குதித்து சாக சம்மதே

  2. உன்னழகை உண்டு விட்ட
    கண்ணிரண்டும் கரைகிறது…..

    //குடை இருந்தும் நனைகின்றேன்..//

    அருமையான வரிகள் நண்பரே.

    //குடையிருந்தும் நனைகின்றேன்//

    குளமாக நீ தெரிய
    குதித்து சாக சம்மதமே

  3. அற்புத வரிகள், படங்களும் இனிமை

    கவிதை வரிகள் நினைவில் நிற்கின்றன.

    தொடருங்கள்
    அன்புடன்
    ஆரூரன்

  4. மிக்க நன்றி நண்பரே ஆரூரன் !!

  5. nantru

  6. மனதை கவிதையின் உச்ச ஸ்தாயியில் நனைத்துவிட்டீர்கள். மனதிற்கினியவளுக்கு நிறைவான பாமாலை! ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் உறவே!!!

    வித்யாசாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: